தமிழ்நாடு

5 கோள்களும் ஒரே நேர்கோட்டில் உள்ள அரிய நிகழ்வு

18 ஆண்டுகளுக்கு பிறகு 5 கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அரிய நிகழ்வு

Published On 2022-06-26 06:43 GMT   |   Update On 2022-06-26 06:43 GMT
  • தென் கிழக்கு அடிவானத்தில் முதலில் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி கோள் இத்துடன் பிறை நிலாவும் சேர்ந்துள்ளதால் மிகவும் அழகாகவும் அரிய நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது.
  • கடந்த 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த நிகழ்வு 18 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது.

கொடைக்கானல்:

சூரியக்குடும்பத்தில் இருக்கும் 5 கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அரிய நிகழ்வு 18 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்ந்து வருகிறது. இதனை விடியற்காலை கிழக்கு அடிவானத்தில் அனைவரும் வெறும் கண்களால் பார்க்கலாம். தென் கிழக்கு அடிவானத்தில் முதலில் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி கோள் இத்துடன் பிறை நிலாவும் சேர்ந்துள்ளதால் மிகவும் அழகாகவும் அரிய நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது.

கடந்த 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த நிகழ்வு 18 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் பின்னர் 2040-ஆம் ஆண்டு தான் இது போன்ற நிகழ்வு ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து கொடைக்கானல் மலைப்பகுதியில் சுமார் 2400 அடி உயரத்தில் தூசி மண்டலங்கள் இல்லாமல் இந்த அரிய நிகழ்வை எளிதாக காண முடியும். எனவே இந்த நிகழ்வை அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை பார்ப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் இதற்காக கொடைக்கானல் வானியற்பியல் ஆராய்ச்சி நிலையத்தில் அதிகாலை நேரங்களில் மக்கள் அனுமதிக்கப்படுவர் என கொடைக்கானல் வானியற்பியல் ஆராய்ச்சி நிலைய தலைவி விஞ்ஞானி எபினேசர் மற்றும் உதவியாளர் கணேசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News