தமிழ்நாடு

ஆயுதப்படை மைதானத்தில் திடீர் தீ விபத்து- 50 டூவீலர்கள் எரிந்து சேதம்

Update: 2022-08-11 16:19 GMT
  • தீயணைப்பு படையினர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுப்படுத்தினர்.
  • 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், கார் தீயில் எரிந்து நாசமாகின.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ஏராளமான வாகனங்கள் நாகை ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இன்று அந்த பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வாகனங்கள் மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கின. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு கார் தீயில் எரிந்து நாசமாகின. தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

Tags:    

Similar News