தமிழ்நாடு

சோழவந்தான் அருகே ரூ.2,500 லஞ்சம் பெற்ற மின்வாரிய அதிகாரி கைது

Update: 2023-03-30 08:59 GMT
  • அம்மா பெயரில் உள்ள மின் இணைப்பை பெயர் மாற்றம் செய்ய முத்துகணேசன் விக்கிரமங்கலத்தில் செயல்பட்டு வரும் மின்வாரிய அலுவலகத்துக்கு சென்றார்.
  • இளநிலை மின் பொறியாளராக பணியாற்றும் குணசேகரன் ரூ. 3 ஆயிரம் கொடுத்தால் தான் பெயர் மாற்றம் செய்து தர முடியும் என்று கூறியுள்ளார்.

சோழவந்தான்:

மதுரை சோழவந்தானை அடுத்த காடுபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துகணேசன். இவர் தன்னுடைய அம்மா பெயரில் உள்ள மின் இணைப்பை பெயர் மாற்றம் செய்ய விக்கிரமங்கலத்தில் செயல்பட்டு வரும் மின்வாரிய அலுவலகத்துக்கு சென்றார்.

அப்போது அங்கு இளநிலை மின் பொறியாளராக பணியாற்றும் குணசேகரன் ரூ. 3 ஆயிரம் கொடுத்தால் தான் பெயர் மாற்றம் செய்து தர முடியும் என்று கூறியுள்ளார்.

இதுபற்றி முத்துகணேசன் போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு இன்று காலை விக்கிரமங்கலம் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று குணசேகரனிடம் ரூ.2,500 லஞ்சம் கொடுத்துள்ளார்.

அப்போது அங்கு மறைந்திருந்த டி.எஸ்.பி. சத்தியசீலன், இன்ஸ்பெக்டர் பாரதிபிரியா ஆகியோர் கையும் களவுமாக குணசேகரனை பிடித்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் விக்கிரமங்கலம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News