தமிழ்நாடு செய்திகள்
நாமக்கல் அருகே மணல் சேமிப்பு கிடங்கில் அமலாக்கத்துறை சோதனை
- விதிமுறைகளை மீறி இந்த குடோன் செயல்படுவதாக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் கிடைத்தது.
- 10 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் மணல் குடோனில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் வளையப்பட்டி ரோடு கூட்டுறவு தொடக்க வேளாண்மை சங்கம் அருகே செவிட்டு ரங்கன்பட்டி பகுதியில் மணல் சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருகிறது.
இங்கு கூடுதல் விலைக்கு மணல் விற்கப்படுவதாகவும், நேரிடையாக மணல் விற்பனை செய்வதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்தது. குறிப்பாக ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு மணல் வழங்க வேண்டும். ஆனால் விதிமுறைகளை மீறி இந்த குடோன் செயல்படுவதாக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் கிடைத்தது.
இதையடுத்து இன்று காலை 9.30 மணி அளவில் 2 கார்களில் வந்த 10 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் மணல் குடோனில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையையொட்டி துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.