தமிழ்நாடு செய்திகள்
கோவில் குளம்
காஞ்சிபுரம் அருகே புதிதாக கட்டிய கோவில் குளக்கரை சுவர் இடிந்தது: பக்தர்கள் குற்றச்சாட்டு
- புதிதாக அமைக்கப்பட்ட கோவில் குளத்தின் கரையின் ஒரு பகுதி சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக சரிந்து விழுந்தது.
- கட்டுமான பணி தரமாக நடைபெறவில்லை என்று பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே உள்ள ஐயங்கார்குளம். இங்குள்ள கைலாசநாதர் கோவிலை ஒட்டி உள்ள குளம் சுமார் ரூ.32 லட்சம் மதிப்பில் புனரமைக்கும் பணி கடந்த மே மாதம் தொடங்கியது.
இந்த நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட கோவில் குளத்தின் கரையின் ஒரு பகுதி சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக சரிந்து விழுந்தது. மேலும் குளத்தை சுற்றிலும் ஆங்காங்கே மண் சரிவும் ஏற்பட்டு உள்ளது.
இதனால் கட்டுமான பணி தரமாக நடைபெறவில்லை என்று பக்தர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.