தமிழ்நாடு

கழுதைகளுடன் சென்று பால் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களை காணலாம்.

குமரி மாவட்டத்தில் கழுதை பாலுக்கு கடும் கிராக்கி: ஒரு சங்கு ரூ.100-க்கு விற்பனை

Update: 2023-02-01 08:26 GMT
  • குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த கழுதைப் பால் கொடுப்பது நல்லது என தகவல் பரவி வருகிறது.
  • கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குமரி மாவட்டம் வந்தோம். தற்போது கழுதைப் பால் விற்பனை அதிகரித்துள்ளது.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டு வருகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் சளித் தொல்லையால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனால் பலரும் மருந்து உட்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த கழுதைப் பால் கொடுப்பது நல்லது என தகவல் பரவி வருகிறது.

இதன் காரணமாக மாவட்டத்தில் கழுதைப் பாலுக்கு கிராக்கி ஏற்பட்டு உள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள தொழுதூர் கிராமங்களை சேர்ந்த சிலர் ஊர் ஊராகச் சென்று கழுதைப் பால் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பூதப்பாண்டி, அழகிய பாண்டியபுரம், எட்டாமடை பகுதிகளில் அவர்கள் வீதி வீதியாக கழுதைகளை அழைத்துச் சென்று பால் விற்று வருகின்றனர். ஒரு சங்கு பால் ரூ.100-க்கு விற்கப்படுகிறது.

இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குமரி மாவட்டம் வந்தோம். தற்போது கழுதைப் பால் விற்பனை அதிகரித்துள்ளது. மக்களின் தேவைக்கு ஏற்ப எங்களால் கொடுக்க முடியவில்லை என்றனர்.

Tags:    

Similar News