தமிழ்நாடு செய்திகள்

ஆன்லைன் மூலம் பறிக்கப்பட்ட ரூ.10 லட்சத்தை மீட்ட சைபர் கிரைம் போலீஸ்

Published On 2022-09-14 15:44 IST   |   Update On 2022-09-14 15:44:00 IST
  • ஆன்லைன் மூலம் வங்கி கணக்கில் இருந்து பறிக்கப்படும் பணத்தை மீட்டு கொடுக்க சைபர் கிரைம் போலீஸ்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
  • பாதிக்கப்படுபவர்கள் 1930 எண்ணில் உடனடியாக புகார் அளிக்கலாம்.

சென்னை:

ஆன்லைன் மூலம் வங்கி கணக்கில் இருந்து பறிக்கப்படும் பணத்தை மீட்டு கொடுக்க சைபர் கிரைம் போலீஸ்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

விருதுநகரை சேர்ந்த முதியவர் பழனிசாமி என்பவரின் ரூ.10 லட்சம் பணத்தை சென்னை தலைமை சைபர் கிரைம் போலீசார் துரிதமாக செயல்பட்டு மீட்டு கொடுத்துள்ளனர்.

இதற்காக சூப்பிரண்டு தேவராணி டி.எஸ்.பி. தாமஸ், மற்றும் உதவி ஆய்வாளர்கள், பால்வண்ணநாதன், கோபிராஜா ஆகியோரை, பழனிசாமி பாராட்டி நன்றி தெரிவித்துள்ளார். இதுபோன்று பாதிக்கப்படுபவர்கள் 1930 எண்ணில் உடனடியாக புகார் அளிக்கலாம்.

Tags:    

Similar News