தமிழ்நாடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தடுப்பணை நிரம்பி தண்ணீர் வெளியேறும் காட்சி.

காஞ்சிபுரம் அருகே தொடர் மழையால் 2 தடுப்பணைகள் நிரம்பி தண்ணீர் வெளியேறியது

Published On 2022-10-28 06:35 GMT   |   Update On 2022-10-28 06:35 GMT
  • திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செல்லும் செய்யாற்றில் தொடர் மழை காரணமாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
  • அனுமன் தண்டலம் பகுதியில் அமைந்துள்ள பழமையான தடுப்பணையில் நீர் வழிந்து ஓடுகிறது.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டம் ஏரிகள் நிறைந்த மாவட்டமாகும். பாலாறு, செய்யாறு, வேதவதி ஆறுகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செல்கிறது.

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செல்லும் செய்யாற்றில் தொடர் மழை காரணமாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதன் காரணமாக அனுமன் தண்டலம் பகுதியில் அமைந்துள்ள பழமையான தடுப்பணையில் நீர் வழிந்து ஓடுகிறது. இதே போன்று வேங்கசேரி தடுப்பணையும் முழு கொள்ளளவை எட்டி 2 ஷட்டர்கள் வழியாக திறக்கப்பட்டு ஆர்ப்பரித்து நீர் செல்கிறது.

பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே இந்த இரு தடுப்பணைகளும் நிரம்பி அதிக நீர் செல்வதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News