தமிழ்நாடு செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டர் தாக்கியதில் காயமடைந்த கனிராஜ்

விளாத்திகுளம் அருகே விசாரணையின்போது தொழிலாளியை தாக்கியதாக சப்-இன்ஸ்பெக்டர் மீது புகார்

Published On 2023-06-09 15:31 IST   |   Update On 2023-06-09 15:31:00 IST
  • கனிராஜ் மற்றும் அழகுமுருகேசன் ஆகியோர் சூரங்குடி போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
  • விசாரணையின்போது கனிராஜ் மற்றும் எஸ்.ஐ. சுந்தரம் ஆகிய இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

விளாத்திகுளம்:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி பகுதியில் வசித்து வருபவர் கனிராஜ். கூலித்தொழிலாளி.

இவரை, இடப்பிரச்சினை சம்பந்தமாக சூரங்குடி சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் தொலைபேசியில் அழைத்து நேரில் விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து கனிராஜ் மற்றும் அழகுமுருகேசன் ஆகியோர் சூரங்குடி போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

விசாரணையின்போது கனிராஜ் மற்றும் எஸ்.ஐ. சுந்தரம் ஆகிய இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுந்தரம், கனிராஜை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட கனிராஜ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக சூரங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News