தமிழ்நாடு

15 நாட்களில் திருத்தணி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.65 லட்சம் வசூல்

Published On 2023-09-30 05:12 GMT   |   Update On 2023-09-30 05:12 GMT
  • பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய பணத்தை முருகன் கோவில் தேவர் மண்டபத்தில் எண்ணும் பணி நடை பெற்றது.
  • 401 கிராம் தங்கம், 2 கிலோ 475 கிராம் வெள்ளி ஆகிய வற்றை உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி உள்ளனர்.

திருத்தணி:

திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசித்து விட்டு செல்கின்றனர்.

பக்தர்கள் அனைவரும் மலைக்கோவிலில் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் பணம், நகை ஆகியவற்றை செலுத்துகின்றனர்.

பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய பணத்தை முருகன் கோவில் தேவர் மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் உஷா, சுரேஷ்பாபு, நாகன், மோகனன் ஆகியோர் முன்னிலையில் கோவில் பணியாளர்களைக் கொண்டு எண்ணும் பணி நடை பெற்றது.

இதில் கடந்த 15 நாட்களில் ரூ.65 லட்சத்து 48 ஆயிரத்து 194 ரொக்கப்பணம் மற்றும் 401 கிராம் தங்கம், 2 கிலோ 475 கிராம் வெள்ளி ஆகிய வற்றை உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி உள்ளனர்.

இதேபோல் திருப்பணி உண்டியல் காணிக்கையாக ரூ.2 லட்சத்து 27 ஆயிரத்து 469 காணிக்கை செலுத்தி உள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News