தமிழ்நாடு செய்திகள்

பழவேற்காடு கடற்கரையில் தூய்மை பணி

Published On 2023-02-13 13:26 IST   |   Update On 2023-02-13 13:26:00 IST
  • விடுமுறை நாட்களில் சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வருவது வழக்கம்.
  • பழவேற்காடு கடற்கரை மணற்பகுதி குப்பைகளாக காட்சி அளிக்கிறது.

பொன்னேரி:

பழவேற்காடு கடற்கரை சுற்றுலா தளமாக விளங்குகிறது. தினமும் காலை, மாலை நேரத்தில் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள்.

விடுமுறை நாட்களில் சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வருவது வழக்கம். சுற்றுலா வருபவர்கள் தாங்கள் கொண்டு வரும் திண்பண்டங்கள், பிளாஸ்டிக் கவர்கள் தண்ணீர் பாடல்களை கடற்கரை மணலிலேயே ஆங்காங்கே போட்டு விட்டு செல்கிறார்கள்.

இதனால் பழவேற்காடு கடற்கரை மணற்பகுதி குப்பைகளாக காட்சி அளிக்கிறது. மேலும் குப்பைகள் காற்றில் பறந்து கடலில் விழுவதால் கடல் நீரும் மாசு அடைகிறது.

பழவேற்காடு கடற்கரை மணற்பகுதியை சுத்தப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் பொன்னேரி வருவாய்த்துறையின் சார்பில் பழவேற்காடு கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. பயிற்சி கலெக்டர் கேத்ரின் சரண்யா தலைமை தாங்கினார். மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர், தாசில்தார் செல்வக்குமார், ஒன்றிய கவுன்சிலர் செல்வழகி எர்ணாவுரான் ஊராட்சி மன்ற தலைவர் கஜேந்திரன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு தூய்மைப்படுத்தினர்.

Tags:    

Similar News