தமிழ்நாடு

இலவசமாக தொழிற்பயிற்சி பெற 31-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்: சென்னை கலெக்டர் அறிவிப்பு

Published On 2023-07-22 09:04 GMT   |   Update On 2023-07-22 09:04 GMT
  • பயிற்சியில் சேரும் அனைவருக்கும் விலையில்லா சீருடை, பாடப்புத்தகம், மிதிவண்டி, காலணி உள்ளிட்டவையும் இலவசமாக வழங்கப்படும்.
  • தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்புபவர்கள் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் செயல்படும் சேர்க்கை உதவி மையத்தை அணுகி சேர்க்கை மேற்கொள்ளலாம்.

சென்னை:

சென்னை மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிண்டி அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2023-ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை 31-ந்தேதி (திங்கட்கிழமை) வரை பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத 8 தொழிற்பிரிவுகளில் நடைபெறுகிறது.

இந்த பிரிவுகளில் 8 மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து வயதினரும் சேர்க்கை பெறலாம். பயிற்சிக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. பயிற்சி காலத்தில் உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ. 750, பயிற்சியில் சேரும் அனைவருக்கும் விலையில்லா சீருடை, பாடப்புத்தகம், மிதிவண்டி, காலணி உள்ளிட்டவையும் இலவசமாக வழங்கப்படும்.

பயிற்சியின்போது தொழிற்சாலைகள் மூலம் இன்டன்ஷிப் பயிற்சி மற்றும் இன்பிளான்ட் பயிற்சி அளிக்கப்படுவதுடன் பயிற்சி முடிந்தவுடன் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும். இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்புபவர்கள் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் செயல்படும் சேர்க்கை உதவி மையத்தை அணுகி சேர்க்கை மேற்கொள்ளலாம். கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள தொலைபேசி: 044-22510001, கைப்பேசி: 94990 மற்றும் 8248738413 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News