தமிழ்நாடு செய்திகள்
போலி பத்திரப்பதிவு- எஸ்.ஐ., உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு
- பல கோடி மதிப்புள்ள இடத்தை போலியாக பத்திரப்பதிவு.
- காவல் உதவி ஆய்வாளர் கலைமணி மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காரைக்குடியில் ஆள் மாறாட்டம் செய்து பல கோடி மதிப்புள்ள இடத்தை போலியாக பத்திரப்பதிவு செய்து மோசடி செய்த விவகாரத்தில் எஸ்.ஐ உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காரைக்குடி கற்பக விநாயகர் நகர் பகுதியில் உள்ள சோமசுந்தரம் என்பவரின் இடத்தை, அதே பெயரில் உள்ள மற்றொருவருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முறையாக விசாரணை செய்யாமல் தடையில்லா சான்று வழங்கியதாக காவல் உதவி ஆய்வாளர் கலைமணி மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தடையில்லா சான்றை வைத்து பவர் பத்திரம் மூலம் நிலத்தை சோமசுந்தரம் என்பவர் விற்பனை செய்துள்ளார்.
காவல் உதவி ஆய்வாளர், சப் ரிஜிஸ்டர், நிலத்தை விற்றவர் மற்றும் வாங்கியவர் உள்பட 11 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.