தஞ்சையில் பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்: பள்ளி மாணவன் பலி
- வெண்ணாற்றங்கரை பாலத்தில் வந்தபோது, எதிரே தஞ்சை நோக்கி வந்த அரசு பஸ் மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதின.
- விபத்தில் மாணவன் ரித்திக் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் சக்கரசாமந்தம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் ரித்திக் (வயது 15).
இவர் தஞ்சையில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை ரித்திக் மோட்டார் சைக்கிளில் பள்ளி யக்ரஹாரத்துக்கு சென்று வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கினார். பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
வெண்ணாற்றங்கரை பாலத்தில் வந்தபோது, எதிரே தஞ்சை நோக்கி வந்த அரசு பஸ் மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதின.
இந்த விபத்தில் மாணவன் ரித்திக் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். மோட்டார் சைக்கிள் பஸ்சுக்கு அடியில் சென்றன.
இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து விசாரணை பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் பலியான ரித்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.