தமிழ்நாடு செய்திகள்

'பிரேக்-அப்' சொன்ன மாணவியை கல்லூரி வளாகத்தில் தாக்கிய மாணவர்

Published On 2023-06-21 15:23 IST   |   Update On 2023-06-21 15:23:00 IST
  • சம்பவத்தன்று மாணவி வழக்கம் போல கல்லூரி முடிந்ததும் விடுதிக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார்.
  • மாணவர் தாக்கியதில் மாணவியின் பின் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தது.

கோவை:

ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் 21 வயது மாணவி. இவர் கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 5-ம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாணவிக்கு அதே கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் பல்வேறு இடங்களுக்கு சென்றும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இந்தநிலையில் மாணவரின் நடவடிக்கைகள் மாணவிக்கு பிடிக்காமல் போனது. இதனையடுத்து அவர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மாணவருடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்தார்.

இதன் காரணாக ஆத்திரம் அடைந்த மாணவர், கல்லூரி வளாகத்தில் வைத்து மாணவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

சம்பவத்தன்று மாணவி வழக்கம் போல கல்லூரி முடிந்ததும் விடுதிக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மாணவர் மாணவியிடம் ஏன் என்னுடன் பேச மறுக்கிறாய். நீதான் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மாணவர், மாணவியின் தலைமுடியை பிடித்து இழுத்து தலையை தரையில் தாக்கினார்.

இதனை பார்த்த அந்த வழியாக சென்ற மாணவர்கள் அவரை தடுத்து மாணவியை மீட்டனர். மாணவர் தாக்கியதில் மாணவியின் பின் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தது. இதனையடுத்து மாணவியை சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார், மாணவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News