தமிழ்நாடு

வாசுதேவநல்லூரில் இரட்டை கொலை- தந்தையை கொன்றவரை கொலை செய்த சிறுவன் கைது

Published On 2023-01-19 05:04 GMT   |   Update On 2023-01-19 05:04 GMT
  • 2 பேருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக ஏற்கனவே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
  • வாசுதேவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தார்.

நெல்லை:

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தேவவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஐயப்பன் (வயது 53), லாரி டிரைவர். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் செல்லத்துரை (55), விவசாயி. இவர் பா.ஜனதா கூட்டுறவு பிரிவின் வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய தலைவராக இருந்து வந்தார்.

இவர்கள் 2 பேருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக ஏற்கனவே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை தெருவில் வைத்து அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த செல்லத்துரை கத்தியால் ஐயப்பனை குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

அப்போது அங்கு வந்த ஐயப்பனின் 17 வயதான மகன் தனது தந்தையை கொன்ற ஆத்திரத்தில் செல்லத்துரை கையில் வைத்திருந்த கத்தியை பிடுங்கி அவரை குத்தியாக கூறப்படுகிறது. இதில் செல்லத்துரையும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து வாசுதேவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தார். பின்னர் அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நெல்லையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

Tags:    

Similar News