தமிழ்நாடு செய்திகள்

கல்குவாரி பள்ளத்தில் தவறி விழுந்து பலியான காட்டெருமையை காணலாம்.

கல்குவாரி பள்ளத்தில் தவறி விழுந்து காட்டெருமை உயிரிழப்பு

Published On 2023-10-04 12:48 IST   |   Update On 2023-10-04 12:48:00 IST
  • வனப்பகுதியில் உள்ள கண் பார்வை தெரியாத காட்டெருமை இரை தேடி கல்குவாரி பகுதிக்கு வந்துள்ளது.
  • பள்ளத்தில் தேங்கியுள்ள தண்ணீர் குடிக்க சென்றுள்ளது. இதில் கால் தவறி 35 அடி பள்ளத்தில் விழுந்துள்ளது.

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்ட தேன்கனிக்கோட்டை அருகே அகல கோட்டை அடுத்துள்ள கும்ளத்துர் கிராம வனப்பகுதியையொட்டி செயல்படாத கல்குவாரி உள்ளது.

வனப்பகுதியில் உள்ள கண் பார்வை தெரியாத காட்டெருமை இரை தேடி கல்குவாரி பகுதிக்கு வந்துள்ளது. அங்கு பள்ளத்தில் தேங்கியுள்ள தண்ணீர் குடிக்க சென்றுள்ளது. இதில் கால் தவறி 35 அடி பள்ளத்தில் விழுந்துள்ளது. இதனால் கால்களில் முறிவு ஏற்பட்டும், உடலில் காயம் ஏற்பட்டும் வலியால் கத்திகொண்டிருந்து. இதை அந்த வழியாக சென்ற கிராம மக்கள் பார்த்து உடனடியாக ஜவளகிரி வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலை அறிந்த ஓசூர் உதவி வனபாதுகாவலர் மாரியப்பன், ஜவளகிரி வனசரக அலுவலர் முரளிதரன், வனவர் ரமேஷ், வனகாப்பாளர் கோவிந்தராஜ், மல்லேஷ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த காட்டெருமையை பள்ளத்தில் இருந்த தீவிர முயற்சியில் மீட்டனர்.

பிறகு வனவிலங்கு கால்நடை மருத்துவர் பிரகாஷ் மற்றும் கால்நடை மருத்து குழுவினர் விரைந்து வந்து கால்கள் முறிவு ஏற்பட்டிருந்ததால் அந்த இடத்திலேயே தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், சிலமணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி காட்டெருமை பரிதாபமாக உயிரிழந்தது. 

Tags:    

Similar News