தமிழ்நாடு செய்திகள்

ஆற்றில் மோட்டார் சைக்கிள் ஓட்டும் வாலிபர்

Published On 2023-04-08 11:51 IST   |   Update On 2023-04-08 11:51:00 IST
  • மோட்டார் ஆக்டேன் என்ற பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில் ஒரு வாலிபர் ஆற்றில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்கிறார்.
  • சிறுவயதில் இருந்தே அவர்கள் நதிக்கரைகளில் வசிப்பதால் உள்ளூர் மக்களுக்கு இது வழக்கமானது தான்

சாலைகளில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்பவர்களை பார்த்திருக்கிறோம். ஆனால் கரடு முரடான பெரிய பாறைகளில் மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் சாகசம் செய்த வீடியோ ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி இருந்தது. இந்நிலையில் ஆற்றில் மோட்டார் சைக்கிள் ஓட்டும் ஒரு வாலிபரின் வீடியோ டுவிட்டரில் தற்போது வைரலாகி வருகிறது. மோட்டார் ஆக்டேன் என்ற பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில் ஒரு வாலிபர் ஆற்றில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்கிறார். அவர் ஒரு பலகையில் இருந்து மோட்டார் சைக்கிள் மூலம் கீழே ஆற்றில் இறங்குவதை காணமுடிகிறது. தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் ஆற்றில் அந்த வாலிபர் பயணம் செய்யும் வீடியோக்களை பார்த்து நெட்டிசன்கள் தற்போது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அதில் ஒருவர், இந்த சாகசம் ஆபத்தானது. என்ஜினுக்குள் தண்ணீர் நுழைந்தால் என்ன நடக்கும்? என கேள்வி எழுப்பி உள்ளார். மற்றொரு பயனர் அபாயகரமான சாகசம் செய்யும் புத்திசாலி என கூறியுள்ளார். அதே நேரம் அசாமில் இதுபோன்ற சாகசங்கள் வழக்கமானது என்று ஒரு நெட்டிசன் குறிப்பிட்டுள்ளார். மேலும் சிறுவயதில் இருந்தே அவர்கள் நதிக்கரைகளில் வசிப்பதால் உள்ளூர் மக்களுக்கு இது வழக்கமானது தான் என குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News