தமிழ்நாடு

தென் ஆப்பிரிக்காவில் 9 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை: வி.ஜி.சந்தோசம் திறந்து வைக்கிறார்

Published On 2023-11-01 09:50 GMT   |   Update On 2023-11-01 10:11 GMT
  • வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 9 அடி உயரமுள்ள 157-வது திருவள்ளுவர் சிலையினை அதன் நிறுவனர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார்.
  • இந்நிகழ்வில் பல்வேறு கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

சென்னை:

தென்னாப்பிரிக்கா டர்பனில் உள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கமும், கிளேர்வுட் தமிழ்க் கல்வியாலயம் மற்றும் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கமும் இணைந்து, நாளை (2-ந்தேதி) தொடங்கி 3 நாட்களுக்கு தமிழ்ப் பண்பாட்டு நிகழ்வு நடத்துகின்றனர்.

இவ்விழாவில், வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 9 அடி உயரமுள்ள 157-வது திருவள்ளுவர் சிலையினை அதன் நிறுவனர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார். இவ்விழாவில் நேரில் பங்கேற்பதற்காக டா்பன் நகருக்கு சென்று மல்லை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மல்லை சி.இ. சத்யா, துர்கா சத்யா ஆகியோரும், மலேசியாவிலிருந்து பல்வேறு தமிழ் அறிஞர்களும் கலந்து கொள்கிறார்கள்.

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் டாக்டர் மிக்கி செட்டி, கிளேர்வுட் தமிழ்க் கல்வியாலயத்தின் தலைவர் மாஸ்டர் ஹூகான் மெர்லின் ரெட்டி மற்றும் தமிழ்ச் சங்க செயல்பாட்டினர் ராஜராஜன் ஆகியோர் விழாவில் பங்கேற்கிறார்கள். இந்நிகழ்வில் பல்வேறு கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

Tags:    

Similar News