தமிழ்நாடு

திருச்சியில் 284 பேர் காய்ச்சலால் பாதிப்பு

Published On 2023-11-27 08:41 GMT   |   Update On 2023-11-27 08:41 GMT
  • பருவமழை தொடங்கியுள்ள நிலையில் திருச்சி மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
  • டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 18 ஆக மாறி உள்ளது.

திருச்சி:

பருவமழை தொடங்கியுள்ள நிலையில் திருச்சி மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 34 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக திருச்சி மாவட்டத்தில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 284 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 83 பேர் 12 வயதுக்குட்பட்ட குழந்தை களாவர். இதற்கிடையே நேற்று 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அந்த அடிப்படையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 18 ஆக மாறி உள்ளது.

காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்கள் திருச்சி மாவட்டத்தில் உள்ள வெவ்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அனைவரும் நலமுடன் இருப்பதாகவும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News