தமிழ்நாடு

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மத்திய ஜெயிலில் 22 கைதிகள் விடுதலை

Published On 2022-09-24 04:50 GMT   |   Update On 2022-09-24 04:50 GMT
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 700 கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தார்.
  • மதுரை மத்திய ஜெயிலில் நீண்ட நாட்கள் சிறைவாசம் அனுபவித்து வரும் கைதிகள் மற்றும் அவர்களின் நன்னடத்தை தொடர்பான விவரங்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டது.

மதுரை:

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 113-வது பிறந்தநாள் கடந்த 15-ந்தேதி கொண்டாடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 700 கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள ஜெயில்களில், சிறைவாசம் அனுபவித்து வரும் நீண்ட நாள் கைதிகள் மற்றும் அவர்களின் நன்னடத்தை தொடர்பான விவரக் குறிப்புகளை உடனடியாக அனுப்பி வைக்கும்படி, சிறைத்துறை டி.ஜி.பி. அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பி வைத்திருந்தது.

அதன் அடிப்படையில் மதுரை மத்திய ஜெயிலில் நீண்ட நாட்கள் சிறைவாசம் அனுபவித்து வரும் கைதிகள் மற்றும் அவர்களின் நன்னடத்தை தொடர்பான விவரங்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டது. இதனை பரிசீலனை செய்து மதுரை மத்திய சிறையில் தண்டனை கைதிகளாக இருந்த ஆயுள் தண்டனை கைதிகள் உள்பட 22 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை அவர்களது உறவினர்கள் மகிழ்ச்சியுடன் அழைத்து சென்றனர்.

Tags:    

Similar News