தமிழ்நாடு
மன்சுக் மாண்டவியா, தமிழிசை சௌந்தரராஜன்

நீட் முதுகலை தேர்வு முடிவுகள் வெளியீடு- தமிழக, புதுச்சேரி மாணவர்களுக்கு ஆளுநர் தமிழிசை வாழ்த்து

Published On 2022-06-01 18:28 GMT   |   Update On 2022-06-01 18:28 GMT
மருத்துவ மேற்படிப்பு நுழைவு தேர்வு முடிவுகளை 10 நாட்களில் வெளியிட்டு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வரலாறு படைத்துள்ளதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த 21 ஆம் தேதி நடைபெற்றது. நடப்பு ஆண்டு நீட் முதுகலை தேர்வை ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 318 தேர்வர்கள் எழுதினர்.

முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள்  வெளியிடப் பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மண்டவியா தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். 

மேலும், தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அவர் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்தியில்,  தேசிய அளவில் போட்டியிட்டு வென்று தேசமெங்கும் மருத்துவ பட்ட மேற்படிப்பு படிக்க செல்லும் தமிழக,புதுச்சேரி மாணவச் செல்வங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும், முயற்சி திருவினையாக்கும் என்று கூறியுள்ளார்.

மருத்துவ மேற்படிப்பு நுழைவு தேர்வு முடிவுகளை மிக குறுகிய காலத்தில் 10 நாட்களில் வெளியிட்டு வரலாறு படைத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு பாராட்டுக்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News