தமிழ்நாடு
மது விற்பனை

ஊட்டியில் மலர் கண்காட்சி நடந்த 5 நாட்களில் மட்டும் ரூ.10 கோடிக்கு மது விற்பனை

Update: 2022-05-27 03:58 GMT
நீலகிரியில் 75 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஊட்டியில் சீசன் துவங்கியதை அடுத்து, மதுக்கடைகளில் கூடுதலாக மது வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டன.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் கோடை சீசனை முன்னிட்டு, மலர் கண்காட்சி நடந்தது.

கடந்த 20-ந்தேதி தொடங்கிய கண்காட்சி 24-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெற்றது. கண்காட்சியில் பல்வேறு வகையான மலர்களை கொண்டு பல வண்ண அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது.

இதனை கண்டு ரசிப்பதற்காக தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தந்தனர். இதனால் ஊட்டி நகரமே களைகட்டி காணப்பட்டது.

அவர்கள் சுற்றுலா தலங்களை கண்டு மகிழ்ந்து, மலர் கண்காட்சியையும் கண்டு ரசித்தனர்.

இந்த நிலையில் மலர் கண்காட்சி நடந்த 5 நாட்களில் மட்டும் மது விற்பனை ரூ.10 கோடியை எட்டியுள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது:-

நீலகிரியில், 75 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஊட்டியில் சீசன் துவங்கியதை அடுத்து, மதுக்கடைகளில் கூடுதலாக மது வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டன.

தினமும் சராசரியாக, 1.80 கோடி ரூபாய்க்கு விற்பனையாகிறது. சீசனையொட்டி கடந்த ஒரு மாதமாக, சராசரி விற்பனை அதிகரித்தது.

20-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை, 5 நாட்கள் மலர் கண்காட்சியையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. அந்த சமயங்களில் மது விற்பனையும் அதிகரித்தது. மலர் கண்காட்சி நடந்த 5 நாட்களில் சராசரி விற்பனை அதிகரித்து, 10 கோடி ரூபாயுக்கு மது வகைகள் விற்பனையாகியுள்ளது

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News