தமிழ்நாடு
வழக்கு பதிவு

மாணவனை கத்தியால் குத்தியவர் கைது- 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு

Published On 2022-05-17 03:33 GMT   |   Update On 2022-05-17 03:33 GMT
மாணவனை கத்தியால் குத்திய மற்றொரு மாணவன் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மாணவனை கைது செய்தனர்.
காவேரிப்பட்டணம்:

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே பண்ணிஅள்ளி புதூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் கடந்த 14ந் தேதி 10ம் வகுப்பு படிக்கும் 15 வயதுடைய மாணவர்கள் 2 பேர் இடையே மாம்பழம் சாப்பிடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மற்றொரு மாணவன் செல்போனில் மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில் நல்லவேளை இன்று நீ பள்ளிக்கு வரவில்லை. நீ வந்து இருந்தால் உன்னை கிழித்து தொங்க விட்டு இருப்பேன் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று சம்பந்தப்பட்ட 2 மாணவர்களும் பள்ளிக்கு வந்தனர். அப்போது 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த ஒரு மாணவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மற்றொரு மாணவனின் தோள்பட்டையில் குத்தினான்.

இதுதொடர்பாக மாணவனை கத்தியால் குத்திய மற்றொரு மாணவன் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மாணவனை கைது செய்தனர்.

பின்னர் கைதான மற்றொரு மாணவரை கிருஷ்ணகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News