தமிழ்நாடு
முல்லை பெரியாறு அணை

முல்லைப்பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2022-04-10 04:18 GMT   |   Update On 2022-04-10 04:18 GMT
தேனி மாவட்டத்தில் பெய்த கன மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கூடலூர்:

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அதன்படி 2 நாட்களாக தேனி மாவட்டத்தில் மழை பெய்தது. நேற்று பகல் பொழுதில் வெயில் அடித்த நிலையில் மதியத்துக்கு மேல் கனமழை வெளுத்து வாங்கியது.

பலத்த காற்றுடன் பெய்த மழையால் பல இடங்களில் பயிர்கள் சாய்ந்தன. மேலும் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.

நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து 850 கன அடியாக உயர்ந்துள்ளது. 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 68.57 அடியாக உள்ளது. 324 கன அடி நீர் வருகிறது. 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 33.90 அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணைக்கு நீர் வரத்து 74 கன அடியாக உயர்ந்துள்ளது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 81.67 அடியாக உயர்ந்துள்ளது.
Tags:    

Similar News