தமிழ்நாடு செய்திகள்
கொடிவேரி அணையில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்
கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணைக்கு கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து அணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்து வருகிறார்கள்.
கோபி:
ஈரோடு மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கியதையொட்டி கடந்த சில வாரங்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மேலும் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயில் அடிக்கிறது. இதனால் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்து அனல் காற்று வீசி வருகிறது.
இதனால் பெரும்பாலான பொதுமக்கள் பகல் வேளையில் வெளியில் வர தயக்கம் காட்டி வருகிறார்கள். மேலும் முதியவர்கள் மட்டுமின்றி இளைஞர்கள் மற்றும் பெண்களும் குடைபிடித்தபடியே சென்று வருகிறார்கள். மேலும் இளம்பெண்கள் தங்கள் துப்பட்டாவால் தலையை மூடி கொண்டே செல்கிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டி வருவதால் பொதுமக்கள் பலர் நீர் நிலைகள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு சென்று வருகிறார்கள்.
கொடிவேரி அணையில் பெரும்பாலும் விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணைக்கு கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து அணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி- அரக்கன் கோட்டை வாய்க்காலில் பாசனத்துக்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மற்றும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் என்பதால் கொடிவேரி அணையில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கொவேரி அணைக்கு வந்திருந்தனர்.
மேலும் ஈரோடு மாவட்ட மட்டுமின்றி கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர். அவர்கள் அணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் அவர்கள் கொண்டு வந்த உணவு வகைகளை அங்கேயே அமர்ந்து சாப்பிட்டனர்.
மேலும் பலர் அணையின் வெளி பகுதியில் விற்பனை செய்யப்படும் மீன் வகைகளை ஆர்வத்துடன் வாங்கி சாப்பிட்டனர். இதில் பலர் கார், வேன் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வந்திருந்தனர். இதனால் அணை பகுதி முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் ரோட்டோரங்களில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன.
இதனால் அணைப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள் அணைக்கு வரும் பொதுமக்களிடம் பாதுகாப்பாக அணையில் குளிக்க வேண்டும் என வலியுறுத்தி கண்காணித்தனர்.
கொடிவேரி அணைக்கு கடந்த 2-ந் தேதி 4 ஆயிரத்து 217 பேர் வந்தனர். நேற்று மட்டும் ஒரே நாளில் 9 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் அணைக்கு வந்து குளித்து மகிழ்ந்து சென்றனர். இதனால் 2-ந் தேதி ரூ.25 ஆயிரத்து 905 வசூலானது. நேற்று மட்டும் 54 ஆயிரத்து 345 ரூபாய வசூலானதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.