தமிழ்நாடு
தமிழக மீனவர்கள்

கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி வந்ததாக ராமேசுவரம் மீனவர்கள் சிறைபிடிப்பு

Published On 2022-04-03 06:16 GMT   |   Update On 2022-04-03 06:16 GMT
இதுவரை சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்படாத நிலையில் மீண்டும் இலங்கை கடற்படை ராமேசுவரத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை சிறை பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமேசுவரம்:

அண்மைக்காலமாக ராமேசுவரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது.

இதை கண்டித்தும், சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரியும் ராமசுவரம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் வேலை நிறுத்தம், போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுவரை சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்படாத நிலையில் மீண்டும் இலங்கை கடற்படை ராமேசுவரத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை சிறை பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன் விபரம் வருமாறு:-

ராமேசுவரம் பகுதியில் இருந்து நேற்று காலை 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இவர்களில் ஒரு தரப்பினர் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப் போது அங்கு சிறிய ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர் களை பார்த்து இந்தப் பகுதி யில் மீன்பிடிக்க அனுமதி இல்லை எனக் கூறி விரட்டி யடித்தனர்.

தொடர்ந்து கடற்படை வீரர்கள் மீனவர்களின் படகுகளில் ஏறி அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை பறிமுதல் செய்ததோடு, வலைகளையும் மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தியதாக தெரிகிறது.

இதனை தொடர்ந்து எல்லை தாண்டி வந்ததாக கூறி தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த மார் கோபோலோ என்பவருக்கு சொந்தமான படகை சுற்றி வளைத்து அதில் இருந்த ராமேசுவரத்தைச் சேர்ந்த டார்சன், செல்வ ரஸ்க்கி, டோரின், சீமோன் தமிழ்ச் செல்வன், இனிக்கோ, பாலா, சிரில், டென்னிஸ், குணா, முனியசாமி, நம்பு முருகன் ஆகிய 12 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்து அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவம் ராமேசுவரம் மீனவர்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

Similar News