தமிழ்நாடு செய்திகள்
அமைச்சர் தா.மோ.அன்பரசன் நலத்திட்ட உதவி வழங்கியபோது எடுத்த படம்

செங்கல்பட்டில் 754 பயனாளிகளுக்கு ரூ.9 கோடியில் நலத்திட்ட உதவி- அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்

Published On 2022-03-30 13:45 IST   |   Update On 2022-03-30 13:45:00 IST
உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 6 பயனாளிகளுக்கு உதவித்தொகை உள்ளிட்டவை என மொத்தம் 754 பயனாளிகளுக்கு ரூ.9.23 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.

செங்கல்பட்டு:

செங்கல்பட்டில் உள்ள தூய கொலம்பா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி தியாகிகளின் புகைப்பட கண்காட்சி மற்றும் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த புகைப்பட கண் காட்சியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் வருவாய் துறை மூலம் 465 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா,சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 30 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 6 பயனாளிகளுக்கு உதவித்தொகை உள்ளிட்டவை என மொத்தம் 754 பயனாளிகளுக்கு ரூ.9.23 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.

இதில் மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், எம்.எல்.ஏ.க்கள் வரலட்சுமி மதுசூதனன்,எஸ்.எஸ்.பாலாஜி, மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல் ராஜ், நகர மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், துணைத்தலைவர் சதீஷ், கவுன்சிலர்கள் திருமலை, தமிழரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News