தமிழ்நாடு செய்திகள்
உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி இளம்பெண் பாலியல் பலாத்காரம்- காதலன் உள்பட 8 பேர் மீது வழக்கு
தனது காதலியை காதலன் நண்பர்களுக்கு இரையாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர்:
விருதுநகர் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளம்பெண் பாண்டியன் நகர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
நானும், விருதுநகர் மேலதெருவை சேர்ந்த ஹரிகரனும் காதலித்து வந்தோம்.
சம்பவத்தன்று பெத்தனாட்சி நகரில் உள்ள மருந்து கிடங்கிற்கு என்னை ஹரிகரன் அழைத்து சென்றார். அப்போது திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறினார். இதை ஏற்று நானும் அவரது ஆசைக்கு இணங்கினேன்.
நாங்கள் இருவரும் உல்லாசமாக இருந்ததை ஹரிகரன் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். சிறிது நாட்களில் அந்த வீடியோ குறித்த விவரம் தெரியவந்தது.
அதனை அழிக்காமல் நான் அழைக்கும் போதெல்லாம் வர வேண்டும். இல்லை என்றால் வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டினார். அப்போது தான் ஹரிகரன் என்னை உண்மையாக காதலிக்கவில்லை என தெரியவந்தது.
ஹரிகரனின் மிரட்டலால் அவர் அழைத்தபோதெல்லாம் சென்றேன். இந்த நிலையில் அவர் அந்த வீடியோவை அவரது நண்பர்களான மாரி, மாடசாமி, கோபி, அகிலன், பிரவீன், பரணி, ஜீனத் அகமது ஆகியோருக்கு அனுப்பி உள்ளார்.
இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட அவர்களும் அந்த வீடியோவை வைத்து என்னை மிரட்டினர். இதில் மாடசாமி என்பவர் எனது வீட்டிற்கே வந்து தாயாரிடம் அந்த வீடியோவை காட்டி மிரட்டினார். தொடர்ந்து மாடசாமி என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இந்த நிலையில் அந்த வீடியோவை வைத்துக்கொண்டு மாரி, கோபி, அகிலன், பிரவீன், பரணி, ஜீனத் அகமது ஆகியோரும் பலமுறை மிரட்டி உறவு கொண்டனர். இவர்களது மிரட்டல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே ஹரிகரன், மாரி, மாடசாமி, கோபி, அகிலன், பிரவீன், பரணி, ஜீனத் அகமது ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளார்.
இதன் அடிப்படையில் பாண்டியன் நகர் போலீசார் 8 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
தனது காதலியை காதலன் நண்பர்களுக்கு இரையாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.