தமிழ்நாடு செய்திகள்
தாம்பரம் வரதராஜபுரத்தில் தெட்சண மாற நாடார் சங்க மஹால்- பா.ஆதவன் ஆதித்தன் திறந்து வைத்தார்
விழாவுக்கு வந்த தந்தி தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் பா. ஆதவன் ஆதித்தனுக்கு செண்டை மேளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நெல்லை தெட்சண மாற நாடார் சங்கம் சார்பில் தாம்பரம் அருகே உள்ள வரதராஜபுரம் கிருஷ்ணா நகர் மணிமங்கலம் சாலையில் டி.டீ.எம்.என்.எஸ். மஹால் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது.
2 மாடிகளை கொண்ட இந்த கட்டிடத்தில் கீழ் தளத்தில் சங்கத்தின் கிளை அலுவலகமும், சாப்பாடு அறையும் அமைக்கபட்டுள்ளது. முதல் மாடியில் குளிர்சாதன வசதி கொண்ட திருமண அரங்கம் உள்ளது. இதில் 300 பேர் அமரலாம்.
இந்த தளத்திலேயே ஐ.ஏ.எஸ். அகாடமியின் கலந்தாய்வு கூடமும் உள்ளது. 2-வது மாடியில் தெட்சண ஐ.ஏ.எஸ். அகாடமி கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள பெயர் பலகை எம்பளத்தில் பெருந்தலைவர் காமராஜர் படமும், சின்னய்யா டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் படமும் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த மண்டபம் மற்றும் ஐ.ஏ.எஸ். அகாடமி விசாலமான வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ். அகாடமியில் மாணவர்கள் படிப்பதற்கு வசதியாக வகுப்பறை தனியாக உள்ளது அலுவலகமும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த 2 மாடிகளுக்கும் செல்லும் வகையில் லிப்ட் வசதியும் உள்ளது.
டி.டீ.எம்.என்.எஸ். மஹால் திறப்புவிழா இன்று காலை நடைபெற்றது. இதில் தந்தி தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன் முதன்மை மற்றும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். டி.டீ.எம்.என்.எஸ். மஹால் மற்றும் சாப்பாட்டு அறை ஆகியவற்றை பா.ஆதவன் ஆதித்தன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
பின்னர் மஹாலில் நடைபெற்ற விழாவில் அவர் பங்கேற்றார். விழாவுக்கு நெல்லை தெட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார் தலைமை தாங்கினார். நியூஸ் 7 தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் வி.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
தெட்சணமாற நாடார் சங்க செயலாளர் ஆர்.சண்முகவேல் நாடார், பொருளாளர் ஏ.செல்வராஜ் நாடார், டி.கள்ளிக்குளம் டி.டீ.எம்.என்.எஸ். கல்லூரி ஆட்சி குழு தலைவரும், திசையன்விளை ஜே.ஏ.எம்.எஸ். மரைன் கல்லூரியின் சேர்மனுமான வி.எஸ்.கணேசன் நாடார், டி.டீ.எம்.என்.எஸ். காரிய கமிட்டி உறுப்பினர் வி.தங்கவேலு நாடார், டி.டீ.எம்.என்.எஸ். மும்பை கிளை சஙக செயலாளர் எம்.எஸ். காசிலிங்கம் நாடார், சென்னை கிளை செயலாளர் எஸ்.ராஜேந்திரன் நாடார் ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டனர்.
விழாவில் ஜே.ஏ.எம்.எஸ். மரைன் கல்லூரி செயலாளர் எஸ்.ஜி.ராஜேஷ் வரவேற்று பேசினார். தெட்சணமாற நாடார் சங்கத்தின் சென்னை கிளையின் சேர்மன் செல்வராஜ், செயலாளர் ராஜேந்திரன், துணை சேர்மன் உத்திர குமார், இணை செய லாளர் கோயில்ராஜ், இயக்குனர்கள் ரத்தின சுப்பிரமணியன், செல்வகுமார் உள்ளிட்டோரும் விழாவில் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் கோவில்பட்டி ராமர், முகிலன்விளை லயன் ராதாகிருஷ்ணன், கருங்கல் ஜார்ஜ், தங்கவேல் நாடார், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ், செயலாளர் ரவி, காப்பாளர் வீர குமார், நாடார் பாது காப்பு பேரவை தலைவர் சீனிவாசன், தேசிய நாடார் கூட்டமைப்பு தலைவர் குமரி சிவாஜி ராஜன், மும்பை தெட்சணமாற நாடார் சங்க நிர்வாகி ராஜ்குமார், பம்பாய் திருவள்ளூர் மன்ற பொதுச்செயலாளர் ஜேம்ஸ் தேவதாசன், பட்டிமன்ற நடுவர் அவனி மாடசாமி மற்றும் தெட்சணமாற நாடார் சங்க நிர்வாகிகள் வைத்திலிங்கம், செல்வராஜ், தேசிய நாடார் சங்க பொதுச் செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட நாடார் சங்க நிர்வாகிகள் பலர் விழாவில் பங்கேற்றனர்.
முன்னதாக விழாவுக்கு வந்த தந்தி தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் பா. ஆதவன் ஆதித்தனுக்கு செண்டை மேளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வழிநெடுக அவரை வரவேற்று பேனர்களும் வைக்கப்பட்டு இருந்தது. போஸ்டர்களும் ஒட்டப்பட்டு இருந்தன.
பா.ஆதவன் ஆதித்தனுக்கு நெல்லை தெட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார் மற்றும் நிர்வாகிகள் பொன்னாடைகளை அணிவித்தனர்.
தெட்சணமாற நாடார் சங்க மஹாலில் முதல் மாடியில் காமராஜர், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் ஆகியோரின் முழு உருவ புகைப்படங்களையும், கல்வெட்டையும் பா.ஆதவன் ஆதித்தன் திறந்து வைத்தார்.
விழாவில் பா.ஆதவன் ஆதித்தனுக்கு தெட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார், செயலாளர் சண்முகவேல் நாடார் ஆகியோர் நினைவுப் பரிசை வழங்கினார்கள். நியூஸ்-7 தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் வி.சுப்பிரமணியனுக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
போலீஸ் உதவி கமிஷனர் ரவி மற்றும் விழாவுக்கு வந்திருந்த முக்கிய பிரமுகர்களும் பா.ஆதவன் ஆதித்தனுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர்.