தமிழ்நாடு செய்திகள்
கறி விருந்தில் பங்கேற்றவர்கள்.

தேர்தலில் வெற்றி பெற்றதால் வாக்காளர்களுக்கு கறி விருந்து வழங்கி அசத்திய அ.தி.மு.க. வேட்பாளர்

Published On 2022-02-24 12:24 IST   |   Update On 2022-02-24 12:24:00 IST
வெற்றி பெற்ற மறுநாளே வாக்களித்த மக்களின் வீடு தேடிச்சென்று அழைப்பிதழ் கொடுத்து கறி விருந்து பரிமாறி அசத்திய சம்பவம் அந்த பகுதியில் வரவேற்பை பெற்றுள்ளது.
காரியாபட்டி:

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சியில் 15 வார்டுகளில் போட்டியிட்ட அ.தி.மு.க. 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் 12-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சத்தியபாமா தாமோதரகண்ணன் 487 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இதனை தொடர்ந்து வாக்காளர்களின் வீட்டுற்கு நேரடியாக சென்று நன்றி தெரிவித்தார். அப்போது அழைப்பிதழ் கொடுத்து அனைவரையும் அவரது திருமண மண்டபத்திற்கு அழைத்துள்ளார். அங்கு அவர்களுக்கு கறி விருந்து பரிமாறி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

வெற்றி பெற்ற மறுநாளே வாக்களித்த மக்களின் வீடு தேடிச்சென்று அழைப்பிதழ் கொடுத்து கறி விருந்து பரிமாறி அசத்திய சம்பவம் அந்த பகுதியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Similar News