தமிழ்நாடு செய்திகள்
ஓசூர் மாநகராட்சியில் தி.மு.க. முன்னிலை - 22 வயது சட்டக்கல்லூரி மாணவி வெற்றி வாகை சூடினார்
ஓசூர் மாநகராட்சியில் தி.மு.க. 14 வார்டுகளிலும், அ.தி.மு.க. 5 வார்டுகளிலும், சுயேச்சைகள் 3 வார்டுகளிலும், பா.ம.க. 2 வார்டுகளிலும் முன்னிலையில் இருந்தது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதன் முதலாக சந்திக்கும் உள்ளாட்சி தேர்தல் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் 2,22,283 வாக்காளர்கள் உள்ளனர். அதில் 1,42,198 வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். அதாவது 63.97 சதவித வாக்குகள் தான் பதிவாகியுள்ளன.
இந்த 45 வார்டுக்கான வாக்கு எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு மத்திகிரி அரசு கலைக்கல்லூரியில் தொடங்கியது.
முதலில் தபால் ஒட்டு உள்ள பெட்டியை தேர்தல் அலுவலர் பால சுப்பிரமணியன் முன்னிலையில் திறந்து அதில் இருந்த 148 தபால் வாக்குகளை வார்டு வாரியாக வரிசைபடுத்தினார்கள்.
இந்த வரிசைபடுத்தும் நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் தேன்மொழி, வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்கள் இருந்தனர்.
வாக்கு எண்ணும் கட்டிடத்தை சுற்றி 50 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அனைத்தும் நடவடிக்கைகளையும் கண்காணிக்கப்படுகின்றன. பாதுகாப்பு பணியில் டி.எஸ்.பி சிவலிங்கம் மற்றும் ஏடிஎஸ்பி ராஜு ஆகியோர் மேற்பார்வையில் 250 போலீசார் பணியில் ஈடுபட்டனர்.
ஓசூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. இதில் வார்டு வாரியாக வெற்றி பெற்ற கட்சி வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-
1-வது வார்டு- அசோகா (அ.தி.மு.க)
2-வது வார்டு- ஸ்ரீதரன் (அ.தி.முக).
3-வது வார்டு- ரஜினி காந்த் (அ.தி.மு.க.)
4-வது வார்டு- ஆறுமுகம் (தி.மு.க.)
5-வது வார்டு-ரவி (தி.மு.க.).
6-வது வார்டு- மம்தா சந்தோஷ் (தி.மு.க.).
7-வது வார்டு- ஆனந்தய்யா (தி.மு.க.)
11-வது வார்டு- தி.மு.க. வெற்றி
தொடர்ந்து ஓட்டு எண்ணும் பணி நடந்து வருகிறது. இதில் தி.மு.க. 14 வார்டுகளிலும், அ.தி.மு.க. 5 வார்டுகளிலும், சுயேச்சைகள் 3 வார்டுகளிலும், பா.ம.க. 2 வார்டுகளிலும் முன்னிலையில் இருந்தது.