தமிழ்நாடு
என்.ஆர்.தனபாலன்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதுக்கு என்.ஆர்.தனபாலன் கண்டனம்

Published On 2022-02-22 06:04 GMT   |   Update On 2022-02-22 06:04 GMT
கள்ள ஓட்டு போட்டவர் நியாயவாதியாகவும், அவனை பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தவர் குற்றவாளியாகவும் நடத்து வது ஜனநாயக நடைமுறைக்கு ஏற்புடையதல்ல.

சென்னை:

பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை ராயபுரத்தில் உள்ள வாக்குச் சாவடியில் கள்ள ஓட்டு நபரை விரட்டிப்பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரை தமிழக அரசு கைது செய்து சிறையில் அடைத்து இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.

கள்ள ஓட்டு போட்டவர் நியாயவாதியாகவும், அவனை பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தவர் குற்றவாளியாகவும் நடத்து வது ஜனநாயக நடைமுறைக்கு ஏற்புடையதல்ல.

ஒட்டு எண்ணிக்கை தொடங்குவதற்கு முந்தைய நாள் முன்னாள் அமைச்சரின் வீட்டிற்கு சென்று அத்துமீறி நடந்து கொண்ட விதம் அறுவறுக்கத்தக்க நிகழ்வாகும். ஜனநாயக நாட்டில் இது போன்ற சம்பவங்கள் துரதிர்ஷ்ட வசமானதாகும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News