தமிழ்நாடு செய்திகள்
அண்ணாமலை

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கடலூரில் இன்று பிரசாரம்

Published On 2022-02-15 09:06 IST   |   Update On 2022-02-15 09:06:00 IST
கடலூர் மாநகராட்சியில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 28 வார்டுகளில் போட்டியிடுகின்றனர்.
கடலூர்:

தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி (சனிக்கிழமை) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது. இதில் பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது. கடலூர் மாநகராட்சியில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 28 வார்டுகளில் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் பா.ஜ.க. வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணியளவில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில் அருகில் நடக்கிறது. இதில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து, தாமரை சின்னத்தில் ஓட்டு கேட்டு பிரசாரம் செய்கிறார். அதன் பின்னர் காரில் சிதம்பரத்திற்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக சிதம்பரம் போல்நாராயணன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

Similar News