தமிழ்நாடு செய்திகள்
நம்பியூர் பகுதியில் மீண்டும் ஊருக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறிய சிறுத்தை
கடந்த சில நாட்களாக நம்பியூர் காந்திபுரம் பகுதியில் இரவில் சிறுத்தை நடமாட்டம் மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பகுதிக்கு வந்த சிறுத்தை 29 கோழிகளை அடித்து கொன்றது.
நம்பியூர்:
ஈரோடு-திருப்பூர் மாவட்ட எல்லையான பாப்பாங்குளம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு சிறுத்தை சோளக்காட்டில் பதுங்கி இருந்தது. அப்போது அங்கு வந்த 3 பேரை அடுத்தடுத்து தாக்கியது.
இதையடுத்து அந்த சிறுத்தை திருப்பூர் புறநகர் பகுதிக்குள் நுழைந்தது. பின்னர் திருப்பூர் நகருக்குள் நுழைந்து அங்கும் சிலரை தாக்கியது. இதையடுத்து வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நம்பியூர் காந்திபுரம் பகுதியில் இரவில் சிறுத்தை நடமாட்டம் மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பகுதிக்கு வந்த சிறுத்தை 29 கோழிகளை அடித்து கொன்றது.
நேற்று முன்தினம் இரவு கன்னியம்மாள் என்பவரது ஆட்டு பட்டிக்குள் புகுந்து அங்கு கட்டி வைத்திருந்த 3 ஆடுகளையும் சிறுத்தை கடித்து குதறி கொன்றது. இதில் ஒரு ஆட்டின் உடலை பாதியாக துண்டித்து எடுத்து சென்றது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்தனர்.
அப்போது அந்த பகுதியில் இருந்த கால்தடங்களை ஆய்வு செய்தபோது அது சிறுத்தையின் கால் தடம் என்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து காந்திபுரம் பகுதியில் 5 இடங்களில் தானியங்கி கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டது. மேலும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும் தண்டோரா மூலம் அறிவித்தனர். மேலும் டி.என்.பாளையம் வனத்துறையினர் சார்பில் இரவு நேரத்தில் கண்காணிப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் சிறுத்தை ஊருக்குள் நுழைந்தது. அப்போது வெங்கிடுசாமி என்பவரது தோட்டத்தில் இருந்த 2 ஆடுகளை அடித்து கொன்று விட்டு தப்பி சென்று விட்டது. தொடர்ந்து இரவு நேரங்களில் சிறுத்தை ஊருக்குள் நுழைந்து கால்நடைகளை வேட்டையாடி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.
விளாமுண்டி வனச்சரகத்தில் இருந்து வெளியேறிய சிறுத்தை அருகில் உள்ள தோட்டத்து பகுதியில் பகல் நேரங்களில் பதுங்கி கொண்டு இரவில் கால்நடைகளை வேட்டையாடி வருகிறது. எனவே இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து கண்காணிக்க கேமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. எனவே சிறுத்தை நடமாட்டத்தை தெரிந்து கொண்டு கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதுகுறித்து திருப்பூர் மாவட்டம் உடுமலை வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களும் வந்து 3 பிரிவாக சிறுத்தையை தேடி வருகின்றனர். எனவே சிறுத்தையை விரைவில் பிடித்து விடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.