தமிழ்நாடு
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் செடிகள் நடவு செய்யும் பணியை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்

தாவரவியல் பூங்காவில் மலர் செடிகள் நடவு செய்யும் பணி

Published On 2022-01-05 05:26 GMT   |   Update On 2022-01-05 05:26 GMT
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் முதற்கட்டமாக சால்வியா, டெல்பீனியம், பெஸ்டிமன், டிஜிட்டாலிஸ் போன்ற மலர் நாற்றுகள் நடும் பணியானது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஊட்டி:

ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்காவில் கோடைசீசனை முன்னிட்டு இந்த ஆண்டு நடைபெற உள்ள 124-வது கண்காட்சிக்காக வண்ண மலர் செடிகள் நடவு செய்யும் பணி தொடங்கியது. இந்த பணியை வனத்துறை அமைச்சர் ராமச்சந்தினர் தொடங்கி வைத்தார்.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மே மாதம் நடைபெற உள்ள 124-வது மலர் கண்காட்சியை முன்னிட்டு பூங்காவின் பல்வேறு பகுதிகளில் பல வண்ண மலர் செடிகளை கொண்டு மலர் பாத்திகளை அமைக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக சால்வியா, டெல்பீனியம், பெஸ்டிமன், டிஜிட்டாலிஸ் போன்ற மலர் நாற்றுகள் நடும் பணியானது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் சிறப்பம்சமாக பொதுமக்கள், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஜெரேனியம், சைக்ளமன், சினரேரியா, கிளக்ஸ்ஸீனியா, ரெனன்குஸ், பல புதிய ரக ஆர்னமென்டல் கேல், ஓரியண்டல் லில்லி, ஆசியா டிக் லில்லி, டேலியாக்கள், இன்கா மெரிகோல்டு, பிகோனியா உள்ளிட்ட 275 வகையான விதைகள் ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பெறப்பட்டு மலர்செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு பூங்காவின் பல்வேறு பகுதிகளில் 5.5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

நடவு செய்யப்படும் மலர் நாற்றுகளுக்கு பனியின் தாக்கம் ஏற்படாத வண்ணம் கோத்தகிரி மெலார் செடிகளை கொண்டு பாதுகாப்பு செய்யப்படும்.

இந்த ஆண்டில் மலர் கண்காட்சியையொட்டி மலர் காட்சி மாடம், கண்ணாடி மாளிகையில் 35 ஆயிரம் வண்ண மலர்த் தொட்டி செடிகள் அடுக்கி வைக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கலெக்டர் அம்ரித், ஊட்டி எம்.எல்.ஏ.கணேஷ், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர்(பொறுப்பு) ஷிபிலா மேரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News