தமிழ்நாடு செய்திகள்
அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராமச்சந்திரன்

மேலும் ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா உறுதி

Published On 2022-01-04 15:51 IST   |   Update On 2022-01-04 15:51:00 IST
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும், திருச்சி தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான திருநாவுக்கரசரின் மகன் ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நாளை (5-ந்தேதி) தொடங்க உள்ள நிலையில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி நேற்று பரிசோதனை செய்துகொண்ட பெரம்பலூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
 
இந்த நிலையில் அவரைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும், திருச்சி தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான திருநாவுக்கரசரின் மகன் ராமச்சந்திரனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதையடுத்து அவர் தனது வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை செய்துகொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.


Similar News