தமிழ்நாடு செய்திகள்
கோப்புப்படம்

புத்தாண்டு கொண்டாட்டம்- ஈரோட்டில் ஒரே நாளில் ரூ.5.28 கோடிக்கு மது விற்பனை

Published On 2022-01-01 09:49 IST   |   Update On 2022-01-01 09:49:00 IST
புத்தாண்டையொட்டி ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.5 கோடியே 28 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளதாக மாவட்ட டாஸ்மாக் பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் 210 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 93 கடைகள் பார் வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. தினமும் ரூ.4 கோடி வரை மதுபானங்கள் விற்பனை ஆகி வரும். ஆனால் பண்டிகை காலங்களில் வழக்கத்தை விட அதிக அளவு விற்பனை ஆகி வருகிறது.

பண்டிகை காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் முன்னதாகவே குடிமகன்கள் டாஸ்மாக் கடையில் குவிந்து தங்களுக்கு வேண்டிய மது வகைகளை அள்ளிச் செல்வார்கள். இதனால் விசே‌ஷ காலங்களில் டாஸ்மாக் விற்பனை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும்.

இந்நிலையில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக குடிமகன்கள் நேற்று மாலை முதல் டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். காலை முதல் மாலை வரை மதுபான விற்பனையும் சுமாராகவே இருந்தது. ஆனால் மாலை 6 மணிக்கு பிறகு டாஸ்மாக் கடையில் குடிமகன்கள் குவிந்தனர். பீர், பிராந்தி, ரம் போன்ற வகைகளை அள்ளி சென்றனர்.

புத்தாண்டையொட்டி ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.5 கோடியே 28 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளதாக மாவட்ட டாஸ்மாக் பொது மேலாளர் தெரிவித்துள்ளார். வழக்கத்தைவிட ரூ.1 கோடியே 28 லட்சத்துக்கு கூடுதலாக மதுபானம் விற்பனையாகி உள்ளது.

Similar News