தமிழ்நாடு செய்திகள்
அரக்கோணம் அருகே பசு மாட்டின் மீது மோதிய சரக்கு ரெயில் தடம் புரண்டது
அரக்கோணம் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டதால் சென்னை, பெங்களூர், கோவை மார்க்கமாக செல்லும் ரெயில்கள் சிறிது நேரம் தாமதமாக சென்றன.
வேலூர்:
காட்பாடியில் இருந்து சென்னைக்கு சரக்கு ரெயில் இன்று மதியம் சென்றது. அரக்கோணம் அடுத்த சித்தேரி அருகே சரக்கு ரெயில் தண்டவாளம் இணைப்பு பாதையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது அந்த வழியாக தண்டவாளத்தை கடக்க முயன்ற பசுமாட்டின் மீது ரெயில் மோதியது. இதில் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 11, 12-வது ரெயில் பெட்டிகள் தண்டாவாளத்தில் இருந்து கீழே இறங்கி நின்றது.
தடம் புரண்ட ரெயில் பெட்டிகளை சீரமைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் சென்னை, பெங்களூர், கோவை மார்க்கமாக செல்லும் ரெயில்கள் சிறிது நேரம் தாமதமாக சென்றன.