செய்திகள்
ஆந்திர பெண் அங்கப்பிரதட்சணம் செய்த காட்சி

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஆந்திர பெண் அங்கப்பிரதட்சணம்

Published On 2021-06-23 01:46 GMT   |   Update On 2021-06-23 01:46 GMT
ஆந்திர மாநிலம் பீமவரம் பகுதியை சேர்ந்த மாதவி என்ற பெண் கடந்த 5 நாட்களாக ஒரு நாளைக்கு 2 கிலோ மீட்டர் வீதம் கிரிவலப் பாதையில் அங்கப்பிரதட்சணம் செய்து வருகிறார்.
திருவண்ணாமலை :

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்குபின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில்ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

தற்போது, ஊரடங்கால் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும், ஆந்திர மாநிலம் பீமவரம் பகுதியை சேர்ந்த மாதவி என்ற பெண் கொரோனா தொற்றில் இருந்து மக்கள் விடுபட வேண்டி கடந்த 5 நாட்களாக ஒரு நாளைக்கு 2 கிலோ மீட்டர் வீதம் கிரிவலப் பாதையில் அங்கப்பிரதட்சணம் செய்து வருகிறார்.

இவர், ஏற்கனவே உலக நன்மைக்காக 3 முறை கிரிவலப்பாதையில் அங்கப்பிரதட்சணம் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News