செய்திகள்
வாய்க்காலில் பாய்ந்த அரசு பஸ்

புவனகிரி அருகே வாய்க்காலில் பாய்ந்த அரசு பஸ்

Published On 2021-01-20 09:37 GMT   |   Update On 2021-01-20 09:37 GMT
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே இன்று அதிகாலை அரசு பஸ் சாலையோரம் உள்ள வாய்க்காலில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
புவனகிரி:

சேலத்தில் இருந்து அரசு பஸ் ஒன்று சிதம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

இந்த பஸ்சை காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்த டிரைவர் குபேந்திரன் (வயது 47) ஓட்டினார். இன்று அதிகாலை புவனகிரி அருகே இரட்டை குளம் என்ற இடத்தில் பஸ் சென்றுகொண்டிருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் நிலைதடுமாறிய பஸ் சாலையோரம் உள்ள வாய்க்காலில் பாய்ந்தது. இதனால் பயணிகள் அலறினர்.

சத்தம்கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கிய பயணிகளை மீட்டனர். இந்த விபத்தில் 4 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 3 பேர் புவனகிரி அரசு ஆஸ்பத்திரிக்கும், ஒருவர் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து புவனகிரி போலீசார் வழக்குபதிவு செய்தனர். பின்னர் அந்த பஸ் கிரேன் மூலம் மீட்கப்பட்டது.
Tags:    

Similar News