செய்திகள்
கைது

கடலூர் மாவட்ட பா.ம.க. நிர்வாகிகள் 245 பேர் கைது

Published On 2020-12-01 07:20 GMT   |   Update On 2020-12-01 07:20 GMT
சென்னையில் போராட்டத்தில் கலந்துகொள்ள சென்ற கடலூர் மாவட்ட பா.ம.க. நிர்வாகிகள் 245 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்:

வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பா.ம.க. மற்றும் வன்னியர்சங்கம் இணைந்து சென்னையில் இன்றுமுதல் டிசம்பர் 31-ந் தேதிவரை தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

இந்த போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள பா.ம.க. மற்றும் வன்னியர்சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதன்பேரில் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கட்சி நிர்வாகிகள் வேன்கள் மற்றும் கார் மூலம் சென்னைக்கு புறப்பட்டனர். இவர்களை அந்த அந்த பகுதிகளில் தடுத்து நிறுத்தி கைது செய்யுமாறு மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் கடலூர், பண்ருட்டி, காடாம்புலியூர், சிதம்பரம், திட்டக்குடி, விருத்தாசலம், மங்கலம்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்ல தயாராக இருந்த பா.ம.க. மற்றும் வன்னியர்சங்க நிர்வாகிகள் 245 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை அந்த அந்த பகுதிகளில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
Tags:    

Similar News