செய்திகள்
விஜயபிரபாகரன்

சட்டசபை தேர்தலில் தேமுதிக அதிக இடங்களை கைப்பற்றும்-விஜயபிரபாகரன்

Published On 2020-11-09 07:34 GMT   |   Update On 2020-11-09 07:34 GMT
சட்டசபை தேர்தலில் தேமுதிக அதிக இடங்களை கைப்பற்றும் என்று விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
ஊட்டி:

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் மகன்கள் சண்முக பாண்டியன், விஜயபிரபாகரன் ஆகியோர் நேற்று ஊட்டியில் நடந்த கட்சி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் விஜயபிரபாகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தே.மு.தி.க. தொடங்கி 15 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. 40 ஆண்டு காலமாக விஜயகாந்த் ரசிகர் மன்றம் உள்ளது. தற்போது தேர்தல் களத்தில் ஜெயலலிதாவும், கருணாநிதியும் இல்லை. களத்தில் உள்ள முதல்- அமைச்சர் வேட்பாளர்களும் முதல் முறையாக நிற்கின்றனர். அவர்களுக்கு அனுபவம் இருந்தாலும், இந்த தேர்தல் முதல் தேர்தல் போன்றதது தான்.

நாங்கள் ஏற்கனவே தேர்தலை சந்தித்து உள்ளதால் தே.மு.தி.க. எதிர்நீச்சல் போட்டு செல்கிறது. வருகிற சட்டமன்ற தேர்தலில் 3-வது அணி அமைய வாய்ப்புள்ளது. அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நண்பனும் இல்லை. சட்டமன்ற தேர்தலை சந்திப்பது குறித்து விஜயகாந்த் முடிவு எடுப்பார். எது எப்படி இருந்தாலும் இந்த முறை பல இடங்களில் நாங்கள் வெற்றியை பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரஜினி அரசியலுக்கு வருவாரா? என நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த விஜயபிரபாகரன், அவர் முதலில் அரசியலுக்கு வரட்டும். அதன்பின்னர் எங்களது கருத்தை சொல்கிறோம் என்றார். முன்னதாக ஊட்டியில் குதிரை சவாரி ஓட்டும் தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கி, குதிரைகளுக்கு சத்தான உணவு வழங்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தார்.
Tags:    

Similar News