செய்திகள்
கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து

அந்தியூர் அருகே கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து- 4 பேர் பலி

Published On 2020-11-08 13:06 IST   |   Update On 2020-11-08 13:24:00 IST
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மலைப்பகுதி சாலையில் கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 கூலி தொழிலாளர்கள் பலியாகினர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தம்புரெட்டிமலை கிராமத்தை சேர்ந்த 15 பேர் வட்டகாடு என்ற இடத்திற்கு தோட்ட வேலைக்கு வாடகை டாட்டா சுமோ காரில் இன்று காலை 7 மணியளவில் சென்றனர்.   

மலைசாலையில் உள்ள இறக்கத்தில் கார் இறங்கியபோது கட்டுப்பாட்டை இழந்து வேகமாக ஓடி, சாலையோரமுள்ள மண் பகுதியில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் தேவராஜ், சிக்கணன், தொட்டப்பி, ஜோகன் ஆகிய 4 பேர் பலியானதோடு, 11 பேர் பலத்த காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் திடீரென காரில் ஏற்பட்ட பழுதும், காரில் அதிக அளவில் ஆட்கள் ஏற்றிச் சென்றதுமே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

Similar News