செய்திகள்
தனியார் துணிக்கடை காவலாளி மீது தாக்குதல்

தனியார் துணிக்கடை காவலாளி மீது தாக்குதல்- போலீசார் விசாரணை

Published On 2020-11-03 15:09 IST   |   Update On 2020-11-03 15:09:00 IST
புதுச்சேரி, அண்ணா சாலையில் உள்ள ஒரு ஜவுளி கடையில் காவலாளியாக பணியாற்றி வரும் முத்துக்குமாரசாமி என்பவர், கடையின் வாயிலில் தூங்கிக்கொண்டு இருந்துள்ளார்.
புதுச்சேரி:

புதுச்சேரி, அண்ணா சாலையில் உள்ள ஒரு ஜவுளி கடையில் காவலாளியாக பணியாற்றி வரும் முத்துக்குமாரசாமி என்பவர், கடையின் வாயிலில்  தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். அதிகாலை 3 மணி அளவில் அங்கு சென்ற 3 பேர் அவரை இரும்பு குழாயால் அடித்துள்ளனர். பின்னர் துடித்து எழுந்து  தப்பிக்க முயற்சித்த அவரை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து தாக்கப்பட்ட காவலாளி சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் உயிரை காப்பாற்றிக்கொள்ள முத்துகுமாரசாமி தப்பி ஒடும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News