செய்திகள்
சென்னை ஐகோர்ட்

அறங்காவலர்களின் பெயர்களை கோவில்களில் ஏன் வெளியிட கூடாது? - ஐகோர்ட் கேள்வி

Published On 2020-09-03 15:56 IST   |   Update On 2020-09-03 15:56:00 IST
அறங்காவலர்களின் பெயர்களை கோவில்களில் ஏன் வெளியிடக் கூடாது என சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை:

அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலின் அறங்காவலர்களின் பெயர்களை வெளியிட உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சென்னை ஐகோர்ட் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அறங்காவலர்களின் பெயர்களை ஏன் வெளியிடக் கூடாது?  

பொறுப்பில் இருப்பவர்களின் விவரங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்வதில் என்ன தவறு உள்ளது?

நிர்வாகிகளின் விவரங்களை கோவில் அறிவிப்பு பலகையில் ஏன் வெளியிடக் கூடாது? எனக் கேள்வி எழுப்பிய சென்னை ஐகோர்ட், இந்த  வழக்கில் செப்டம்பர் 17-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்ட்மும் என அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

Similar News