செய்திகள்
இலவசமாக தற்காப்பு பயிற்சி அளிக்கும் ஆசிரியர்

கிராமம் கிராமமாக சென்று இலவசமாக தற்காப்பு பயிற்சி... அசத்தும் அரியலூர் ஆசிரியர்

Published On 2020-08-06 13:49 GMT   |   Update On 2020-08-06 13:49 GMT
அரியலூர் அருகே கிராமம் கிராமமாக சென்று மாணவ- மாணவிகளுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுத்தரும் ஆசிரியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள குவாகம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் தத்தனூர் அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பட்டதாரி படிப்பு முடித்து கராத்தே பயிற்சியில் நன்கு பயிற்சி பெற்றவர்.

தான் அறிந்த கலைகளை அனைத்துக் பகுதி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆண்டிமடம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் ஊர் ஊராக சென்று அந்தந்த பகுதிகளில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு கராத்தே, சிலம்பம், ஜிம்னாஸ்டிக், யோகா, நீச்சல் உள்ளிட்ட பல்வேறு தற்காப்பு கலைகளை இலவசமாக கற்றுக்கொடுத்து வருகிறார். ஆசிரியரின் செயலுக்கு பொதுமக்கள் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News