செய்திகள்
புதுவை முதலமைச்சர் நாராயணசாமி

எம்.ஜி.ஆர். சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை - நாராயணசாமி எச்சரிக்கை

Published On 2020-07-24 11:22 GMT   |   Update On 2020-07-24 11:22 GMT
எம்.ஜி.ஆர். சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி:

வில்லியனூரில் புதுச்சேரி - விழுப்புரம் புறவழிச்சாலையின் நடுவே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு நேற்று மதியம் காவி துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆர். சிலையை அவமதித்தவர்கள் மீது புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் புதுச்சேரியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி துண்டு அணிவிக்கப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:

புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படும். யார் தவறு செய்திருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News