செய்திகள்
கலெக்டர் அருண்

மாணவர்கள் சான்றிதழ்கள் பெற ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்- கலெக்டர் உத்தரவு

Published On 2020-07-23 06:30 GMT   |   Update On 2020-07-23 06:30 GMT
புதுச்சேரி மாணவர்கள் சான்றிதழ்கள் பெற ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் அருண் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வருவாய் துறையின் மூலம் வழங்கப்படும் குடியிருப்பு, சாதி மற்றும் வருமானச் சான்றிதழ்களை ஆன்லைன் வழியாக வழங்கும் முறை 2019-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் சென்டாக் மூலம் மேற்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையின் போது மாணவர்கள் சான்றிதழ்களை விரைவில் பெற வருவாய்த்துறை தனிப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் நடப்பாண்டுக்கு கடந்த ஜனவரி முதலே அந்தந்த பள்ளிகளின் வழியாக மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி பள்ளிகளின் மூலம் பெறப்பட்ட இணையவழி விண்ணப்பங்களை பரிசீலித்து சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

இருப்பினும் சான்றிதழ்களுக்காக மக்கள் தாசில்தார் அலுவலகங்களில் தினமும் வருகின்றனர். கொரோனா காலத்தில் கூட்டம் கூடுவது பாதுகாப்பானது அல்ல என்பதால் மக்கள் சான்றிதழ்களுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பொதுமக்கள் இருக்கும் இடத்தில் இருந்தே கணினி அல்லது செல்போன் மூலமாகவோ, அருகில் இருக்கும் பொதுசேவை மையத்தின் மூலமாகவும் சான்றிதழ்களுக்கு https://edistrict.py.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் புதுச்சேரி தாலுகா 0413-2356314, உழவர்கரை தாலுகா 2254449, வில்லியனூர் தாலுகா 2666364, பாகூர் தாலுகா 2633453 ஆகிய எண்களை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News