செய்திகள்
அம்மா உணவகம் ஆணையாளர் ஆய்வு

அம்மா உணவகத்தில் நகராட்சி ஆணையாளர் ஆய்வு

Published On 2020-07-06 13:47 GMT   |   Update On 2020-07-06 13:47 GMT
சிதம்பரம் அம்மா உணவகத்தில் நகராட்சி ஆணையாளர் சுரேந்திரஷா ஆய்வு செய்தார்.
சிதம்பரம்:

சிதம்பரம் அரசு சித்தா மருத்துவத்துறை மற்றும் நகராட்சி சார்பில் அம்மா உணவகத்தில் நிலவேம்பு மற்றும் கபசுர குடிநீர் தயாரிக்கப்பட்டு, நகராட்சி பணியாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிதம்பரம் நகராட்சி ஆணையாளர் சுரேந்திரஷா, அம்மா உணவகத்துக்கு ஆய்வு நடத்துவதற்காக சென்றார். அங்கு தயாரிக்கப்பட்ட கபசுர குடிநீரை குடித்தார். மேலும் உணவகத்தில் தயார் செய்யப்படும் உணவுகளையும் அவர் ஆய்வு செய்தார். அப்போது அரசு சித்த மருத்துவர் அர்ச்சுனன் உள்பட பலர் உடனிருந்தனர்.

இதுகுறித்து ஆணையாளர் சுரேந்திரஷா கூறுகையில், சிதம்பரத்தில் 33 வார்டுகளில் உள்ள பொதுமக்கள், வங்கிகள், அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சுகாதார ஆய்வாளர் பாக்கியநாதன் தலைமையில், மேற்பார்வையாளர்கள் காமராஜ், பாஸ்கர், சக்கரவர்த்தி, தில்லைநாயகம், ராஜாராம், சுதாகர், ஆனந்தகுமார், கவுசல்யா ஆகியோர் கொண்ட குழுவினர் கபசுர குடிநீர் வழங்கி வருகின்றனர். தொடர்ந்து 5 நாட்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்படும் என்றார்.
Tags:    

Similar News